loader
### தமிழக முதல்வரை சந்திக்கின்றனர்: மலேசியக் கலைஞர்கள்

### தமிழக முதல்வரை சந்திக்கின்றனர்: மலேசியக் கலைஞர்கள்

சென்னை, ஆக. 13-

 மலேசிய தமிழர் சமூக பண்பாடு மற்றும் நட்புறவு பயணத்தின் ஏற்பாட்டாளர் மணிவாசகம் தலைமையில், மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் குறுகியகால பயணமாக தமிழகம் வந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி முதல்வரையும், தமிழக முதல்வரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மலேசியக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து ‘பொன்னந்தி மாலைப்பொழுது’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி முதல்வரை சந்திப்பதுடன், தமிழக முதல்வரை சந்திப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், தமிழக அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மலேசியா மற்றும் தமிழகம் இடையிலான கலை, பண்பாடு மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என்றும், இரு தரப்பினருக்கும் இடையே நல்லுறவுக்கான பாலத்தை ஏற்படுத்த இது வழிவகுக்கும் என்றும் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு இன்று வருகை தந்த அவர், இருநாட்டு கலைஞர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்களின் இந்தச் சந்திப்புகள் எதிர்காலத்தில் மேலும் பல்வேறு ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

-முருகன்

0 Comments

leave a reply

Recent News