loader
அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதற்கான புதிய நடைமுறை; வர்த்தகர்கள் FWCMS இணையதளம் வழி பதிவு செய்ய வேண்டும்!

அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதற்கான புதிய நடைமுறை; வர்த்தகர்கள் FWCMS இணையதளம் வழி பதிவு செய்ய வேண்டும்!

கோலாலம்பூர்,ஆக.12-

அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பில் மலேசியதுணை குத்தகையாளர் சங்கம் ஏற்பாடு செய்த விளக்கக்கூட்டத்தில் நாடு முழுவதிலும்இருந்து சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வர்த்தகர்கள் அந்நிய தொழிலாளர்களை விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களைச்சமர்ப்பிப்பது மற்றும் FWCMS இணையதளம் வழியாகப் பதிவு செய்வது தொடர்பானநடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.

மலேசிய துணை குத்தகையாளர் சங்கத்தின் ஆலோசகர் மோகனா கூறுகையில், தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பான நடைமுறைகளைவர்த்தகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விளக்கக்கூட்டம்ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அனைத்து வர்த்தகர்களும் FWCMS இணையதளம் வழியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்றும், இன்றைய கூட்டத்தில் FWCMS துறையைச் சேர்ந்த அதிகாரிநேரடியாக கலந்து கொண்டு பதிவு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்துவிளக்கமளித்ததாகவும் தெரிவித்தார்.

“உள்நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சில தொழில் துறைகளில் உள்நாட்டவர்கள் வேலைசெய்ய முன்வருவதில்லை. இதனால் அந்தத் துறைகளின் தொழிலாளர் தேவையை பூர்த்திசெய்ய அந்நிய தொழிலாளர்களின் தேவை ஏற்படுகிறது,” என்றார்.

மேலும், தங்களது சங்கத்தின் வாயிலாக உறுப்பினர்களுக்கு பல்வேறு வர்த்தக வாய்ப்புகள்மற்றும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மோகனா குறிப்பிட்டார்.

“இந்த விளக்கக்கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து வர்த்தகர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு தொழில் துறைக்கும் ஏற்றவாறு விண்ணப்ப நடைமுறைகள்மாறுபடக்கூடும். அதற்கேற்ப தேவையான அந்நிய தொழிலாளர்களை பெற்றுக்கொள்ளும்வாய்ப்பும் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை முறையாகச்சமர்ப்பித்தால், புதிய நடைமுறையின் மூலம் விண்ணப்ப செயல்முறையை எளிதாக முடிக்கமுடியும்,” என்றும் அவர் கூறினார்.

மலேசிய துணை குத்தகையாளர் சங்கத்தின் தலைவராக சந்திரா எல். ராம் பிரகாஷ்செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முடிதிருத்தும் நிலைய உரிமையாளர் கண்ணன் பழனிச்சாமி கூறுகையில், அந்நியதொழிலாளர்களை தருவிப்பதற்கு அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை வரவேற்பதாகதெரிவித்தார்.

“FWCMS இணையதளம் வழியாக எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பலர்கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த விளக்கக்கூட்டம் அதற்கான தெளிவான பதிலைவழங்கியுள்ளது. குறிப்பாக இணையப் பதிவு செய்வது தொடர்பான விரிவான விளக்கம்எங்களுக்கு இந்தக் கூட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது,” என்றார்.

பாதுகாவலர் துறையைச் சேர்ந்த இராஷினி கூறுகையில், இந்தக் கூட்டத்தின் மூலம் பலபுதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்தார்.

“இதற்கு முன்னர் முறையான விண்ணப்ப நடைமுறை இல்லாததால் பல்வேறுபிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபுதிய முறை எளிதாகவும் தெளிவாகவும் உள்ளது. இதன் மூலம் அன்னிய தொழிலாளர்களைவிண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குவதுடன், தொழில் துறைகளின் உண்மையான தொழிலாளர் தேவையை கருத்தில் கொண்டுவிண்ணப்பங்களைச் செய்வதற்கும் இந்த விளக்கக்கூட்டம் வர்த்தகர்களுக்கு பயனுள்ளதாகஅமைந்தது.

0 Comments

leave a reply

Recent News