கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழாவின் பயணத்தில், பினாங்குமாநிலத்தைத் தொடர்ந்து தற்போது பேராக் மாநிலத்தில் ஈப்போ மாநகரத்தில்கண்ணதாசன் விழா கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.
எதிர்வரும் ஆகஸ்ட்டு 15ஆம் தேதி சனிக்கிழமை மதியம் ஒன்றரை தொடங்கி மாலை 5 மணி வரை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்கள் ஐயா தா.இராமலிங்கம் அவர்களும், மரபின் மைந்தன் முத்தையா அவர்களும், தாமல் கோ.சரவணன் அவர்களும் வெவ்வேறுதலைப்புகளில் மிகச் சிறந்த இலக்கிய உரையை ஆற்றவிருக்கிறார்கள். மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ஐவருக்கு கண்ணதாசன் அறவாரியத்தின் சார்பில் விருதும்வழங்கப்பட விருக்கிறது.
கண்ணதாசனின் கருத்தாழமிக்கப் பாடல்களோடு தொடங்கும்இந்நிகழ்ச்சி சிறந்த இலக்கிய விருந்தாக அமையும். நூறு ஆண்டுகள் மக்களின் மனதில்நீங்கா இடம் பெற்று, இன்றும் உலகம் எங்கும் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா சிறப்பாகஅரங்கேறிக் கொண்டிருக்கிறது. 'காவியத்தாயின் இளைய மகன்' கவியரசு கண்ணதாசன்அவர்களைக் கொண்டாடவும், தமிழைப் போற்றவும், இலக்கியச்சுவையில் நனையவும்திரண்டு வாருங்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தேநீர் விருந்துவழங்கப்படும்.
0 Comments