சிரம்பான், ஜூன் 4-
36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், 16ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் நாளை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படவுள்ளது.
இவ்விவரத்தை நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன், தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார்.
மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதன் மூலம், மாநிலத்தின் புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான 16ஆவது மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments